2025 ஜூலை 26, சனிக்கிழமை

ரூ. 20 கோடி காப்புறுதிக்காக, 2 கால்களையும் வெட்டிய மருத்துவர்

Editorial   / 2025 ஜூலை 25 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபாய் பெறுமதியில் 20 கோடியை   பெறுவதற்காக மருத்துவர் ஒருவர் தனது முழங்காலுக்கு கீழ் உள்ள இரண்டு கால்களையும் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் காப்பீடு பணம் 5 லட்சம் பவுண்டுகள் பெறுவதற்கே இந்த நபர் இவ்வாறு செய்துள்ளார்.

நீல் ஹாப்பர் என்ற அந்த மருத்துவர் காப்புறுதி  பணம் பெறும் நோக்கில் கால்களை அகற்றியுள்ளதாக காப்பீடு நிறுவனங்கள் குற்றம் சாட்டி நீதிமன்றத்தை நாடியுள்ளன. முழங்கால்களை பாதுகாப்பாக அகற்றுவது எப்படி என்பது தொடர்பான வீடியோக்களை வெப்சைட்டில் இருந்து நீல் ஹாப்பர் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

நிதி சார்ந்த விஷயங்களில் பிரதானமாக பார்க்கப்படுவது காப்புறுதிதான் தான். குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு எந்தவொரு உடல்நலக் குறைவோ, விபத்தோ என்ன பிரச்சனை நேர்ந்தாலும் அந்தக் குடும்பத்தினர் பெரிய பணப் பிரச்சனைகளில் சிக்காமல் பாதுகாக்கவும், உரிய மருத்துவம் பெறுவதற்கும் காப்புறுதி என்பது உதவி வருகிறது.

குறிப்பாக, குடும்பத்தில் வேலைக்குச் செல்லும் நபருக்கு விபத்து ஏற்பட்டாலோ அல்லது இறந்தாலோ அந்தக் குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாக்க காப்புறுதி  என்பது மிகவும் உதவிகரமாக உள்ளது.

இந்நிலையில், நீல் ஹாப்பர் தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக காப்புறுதி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கால்கள் அகற்றப்படுவது தொடர்பான வீடியோக்களை நீல்ஹாப்பர் ஒரு வலைத்தளத்திலிருந்து வாங்கியது தெரியவந்துள்ளது.

காப்புறுதி நிறுவனம் அளித்த புகாரில், நீல் ஹாப்பர் தனக்கு ரத்த நாளப் பிரச்சினை உள்ளது என்றும், முழங்கால்கள் அகற்றப்படாவிட்டால் அது உடல் முழுவதும் பரவும் என்று தங்களை நம்ப வைக்க முயன்றதாக புகாரில் தெரிவித்துள்ளன. காப்புறுதி பணத்துக்காக மருத்துவர் ஒருவர் தனது இரண்டு கால்களையும் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X