Freelancer / 2024 நவம்பர் 09 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில், இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில், சுமார் 24 பேர் பலியானதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.
ரயில் ஒன்று நடைமேடைக்கு வருவதற்கு சற்று முன்னதாக, பிளாட்பாரத்தில் குண்டு வெடித்ததாக, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெஷாவரில் இருந்து ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சரியாக 9 மணிக்கு வர இருந்தது. இருப்பினும், குறித்த ரயில் அந்நேரத்துக்கு வந்திருந்தால், பலி எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கும்.
“தற்கொலை படை மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். ஆனால், முன்னதாகவே அந்த முடிவுக்கு வர முடியாது. குண்டு வெடிப்பு எப்படி நடைபெற்றது என்பதை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்பு நடைபெற்ற போது ரயில் நிலையத்தில் சுமார் 100 பேர் இருந்தனர்” என குவெட்டா பொலிஸார் தெரிவித்தனர்.AN

4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago