2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

ரஷ்ய அதிபரின் அதிரடி உத்தரவு

Freelancer   / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று ரஷ்ய அதிபர் விலாதிமிர் புடின் கூறியுள்ளார்.

இதேவேளை, உக்ரைன் இராணுவத்தை ஆயுதங்களைக் கீழே போடுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

"நான் ஒரு இராணுவ நடவடிக்கையின் முடிவை எடுத்துள்ளேன்," என்று அவர் தொலைக்காட்சி   அறிக்கையில்  கூறினார்.

உக்ரைனில் இருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புடின் கூறினார். 

உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும் அவர் கூறினார். 

இரத்தக்களரிக்கான பொறுப்பு உக்ரேனிய "ஆட்சிக்கு" உள்ளது என்று புடின் கூறினார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .