2024 மே 11, சனிக்கிழமை

ரஷ்ய ஜனாதிபதி புடின் கைது?

Ilango Bharathy   / 2023 மார்ச் 20 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புடினைக் கைது செய்யுமாறு  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணைப் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி உக்ரேன் மீது ரஷ்யா கடந்த ஒரு வருட காலமாக தாக்குதல் நடத்தி வருகின்றது.

 இதன்காரணமாக அமெரிக்கா,பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும்  ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல் நடத்துவதற்கு உக்ரேனுக்கு  பல மில்லியன் மதிப்புள்ள இராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், இப் போர் தொடர்பான மனுவை விசாரித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய ஜனாதிபதி புடினை  கைது செய்ய பிடியாணை பிறப்பித்தது.

இப்போர் காரணமாக சட்டவிரோதமாக பல மக்கள், குழந்தைகளை நாடு கடத்தி இடமாற்றம் செய்யும் சூழல் உருவானது. உக்ரேன் குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு புடின் தான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொறுப்பு” எனத் தெரிவத்தே இந்த உத்தரவை சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமைட்ரோ குலேபா வரவேற்றுள்ளார்.
 

அதேவேளை, சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அர்த்தமற்றது. எங்கள் நாட்டிற்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முடிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ரஷ்ய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஷகரோவா கூறியுள்ளார்.

ரஷ்யா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பு நாடு இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .