Editorial / 2019 மே 15 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ராஜேந்திர பாலாஜி, இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமலின், கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இவரது பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்கம் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கண்டனத்திற்குரியது என்றும் பதவிப்பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை மீறும் வகையில் நடந்ததற்காக அமைச்சர் பதவியிருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago