2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 254 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2026 ஏப்ரல் 09 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நேற்று நடத்திய  இராணுவத் தாக்குதல்களில்  254 பேர் உயிரிழந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய இந்த வான்வழித் தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தாலும், லெபனான் மீதான தனது தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேல் அறிவித்திருந்த நிலையில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .