Editorial / 2019 டிசெம்பர் 06 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரதமரொருவரைப் பெயரிடுவதற்காக லெபனானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடல்கள் இடம்பெறும்போது, லெபனானின் அடுத்த பிரதமராக சுன்னி வர்த்தகரான சமிர் கட்டிப் தெரிவுசெய்யப்படுவார் போலத் தோன்றுவதாக அரசியல் தகவல்மூலங்கள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளன.
ஆளும் வர்க்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டங்களால் பிரதமர் சாட் அல்-ஹரிரி விலகி ஒரு மாதத்துக்குப் பின்னர் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மிஷெல் அன் கலந்துரையாடவுள்ளார்.
இந்நிலையில், கலந்துரையாடல்களின்போது சுன்னி அரசியல்வாதியான ஹரிரியால் தலைமை தாங்கப்படும் எதிர்கால இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஷியாக் குழுக்களான ஹிஸ்புல்லா, அமல் என அனைத்தும் கட்டிப்பை ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், லெபனானின் பிரதான சுன்னி, ஷியா முஸ்லிம் சக்திகளுடன் ஆதரவுடன், வேறெந்த பிரகடனப்படுத்தப்பட்ட வேட்பாளரும் இதுவரையில் இல்லாத நிலையில், தற்போதைய நிலையில் பிரதமராக கட்டிப் தெரிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் வேட்பாளராக கட்டிப்பை நிராகரித்துள்ள சில ஆர்ப்பாட்டக்காரர்கள், தாங்கள் அகற்ற எதிர்பார்க்கும் வர்க்கமாகவே அவரைக் கருதுகின்றனர்.
புதிய அரசாங்கமொன்றின் பிரதமராக மீளத் திரும்ப விரும்பவில்லை என கடந்த வாரம் ஹரிரி தெரிவித்திருந்தார்.
மேற்குலக, வளைகுடா அரேபிய நாடுகளுக்கு ஆதரவான ஹரிரி, ஈரானால் ஆதரவளிக்கப்படும் ஹிஸ்புல்லா மற்றும் ஜனாதிபதி அன் உள்ளிட்ட அதன் நட்புறவாளர்களுடனான அரசியல் வேறுபாடுகளால் புதிய அரசாங்கமொன்றை இணங்குவதற்கான முயற்சிகள் குழம்பியிருந்தன.
20 minute ago
45 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
45 minute ago
51 minute ago