2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வடக்கு வஜிரிஸ்தான் தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் காயம்

Freelancer   / 2023 ஜனவரி 29 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள மிர் அலி தெஹ்சில் பகுதியில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஐந்து வீரர்கள் காயமடைந்ததாக தி நியூஸ் இன்டர்நேஷனல் தெரிவிக்கிறது.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் தற்கொலை குண்டுதாரியினால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காயமடைந்த சிப்பாய்கள் சஜித், ஜாகிர் ஷா, முஹம்மது உஸ்மான், முஹம்மது உஸ்மான் கனி மற்றும் அஹ்சன் நசீர் ஆகியோர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக நியூஸ் இன்டர்நேஷனல் அறிக்கை கூறியது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

டிசெம்பர் 23 அன்று பாகிஸ்தானின் தலைநகரில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சக்திவாய்ந்த கார் வெடிகுண்டைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இதேபோன்ற தாக்குதலில் இரண்டு சந்தேகத்துக்கிடமான தீவிரவாதிகளும் ஒரு அதிகாரியும் கொல்லப்பட்டனர், 

நாட்டின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றில் தீவிரவாதிகள் இருப்பார்கள் என்ற அச்சத்தை எழுப்பியது. குண்டுவெடிப்பில் குறைந்தது மூன்று பொலிஸ் அதிகாரிகளும், ஏழு வழிப்போக்கர்களும் காயமடைந்தனர்.

இராணுவம் மற்றும் அரசாங்க உளவு அமைப்புகளின் தாயகமான ராவல்பிண்டியின் காரிஸன் நகரத்திலிருந்து ஒன்பது மைல் தொலைவில் குண்டுவெடிப்ப நடந்ததுடன், இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளால் சூழப்பட்ட பின்னர் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை சந்தேக நபர் வெடிக்கச் செய்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. இந்த குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்ததோடு, பொலிஸாருக்கு நன்றி தெரிவித்தார்.
 
பாகிஸ்தானில் 9/11 முதல் 504 தற்கொலைத் தாக்குதல்கள் நடந்துள்ளன, இதில் 6,748 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 15,111 பேர் காயமடைந்தனர். 

தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் கடந்த மாத இறுதியில் போர்நிறுத்தத்தை முறையாக முடிவுக்கு கொண்டு வந்த பின்னர், குழு அதன் பயங்கரவாத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதால், தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

"பன்னுவின் லக்கி மார்வாட் மாவட்டத்தில் இராணுவக் குழுவால் தொடர்ச்சியான இடைவிடாத தாக்குதல்கள் தொடங்கப்பட்ட பின்னர்" அமைப்பு இந்த முடிவை எடுத்ததாக தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் ஓர் அறிக்கையில் கூறியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .