2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

விண்ணில் ஏவப்பட்டு 14 வினாடிகளில் வெடித்துச் சிதறிய ரோக்கெட்

R.Tharaniya   / 2025 ஜூலை 31 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்திரேலியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக கில்மர் நிறுவனம் செயல்படுகிறது. குயின்ஸ்லாந்து மாகாணம் யாடலா நகரை மையமாக கொண்டு செயல்படும் இந்த தனியார் நிறுவனம் அரசின் நிதியுதவிகளை பெற்று வருகிறது. இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக ராக்கெட் ஒன்றை தயாரித்து விண்ணில் செலுத்த கில்மர் நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி 'எரிஸ்' என்ற ராக்கெட்டை தயாரித்தது. குறித்த நேரத்தின்படி இது நேற்று விண்ணில் ஏவப்பட்டது. கில்மர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏவுதளத்தில் இருந்து அந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. கரும்புகையை கக்கியபடி விண்ணில் சீறிப்பாய்ந்த அந்த ராக்கெட் 14 நொடிகளில் வானில் பறந்து கொண்டிருந்தபோதே வெடித்து சிதறியது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு மீண்டு வருவோம் என அந்த நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .