Editorial / 2019 மார்ச் 14 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் மெல்பேணில், 1990களில் தேவாலய பாடகச் சிறுவர்கள் இருவரை, பாலியல் ரீதியாக துன்புறுத்தியமைக்காக, வத்திக்கானின் முன்னாள் பொருளாளர் கர்தினால் ஜோர்ஜ் பெல்லுக்கு ஆறாண்டுகள் சிறைத்தண்டனை தீர்ப்பை, விக்டோரியா கவுண்டி நீதிமன்றம் நேற்று (13) வழங்கியுள்ளதுடன், தனது எஞ்சிய ஆயுட்காலம் முழுவதும் பாலியல் தாக்குதலாளியொருவராக அவர் பதியப்படவுள்ளார்.
இதேவேளை, தனது எஞ்சிய வாழ்நாளை 77 வயதான ஜோர்ஜ் பெல், சிறையில் களிக்கக்கூடிய உண்மையான வாய்ப்பு காணப்படுவதாக விக்டோரியா கவுண்டி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பீற்றர் கிட் தெரிவித்துள்ளார்.
பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸின் முன்னாள் உயர் ஆலோசகரான ஜோர்ஜ் பெல்லே, சிறுவர் பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட மிகவும் சிரேஷ்ட கத்தோலிக்கர் ஆவார்.
இரண்டு சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஐந்து குற்றச்சாட்டுகளைக் கொண்டிருந்த ஜோர்ஜ் பெல், ஒரு மணித்தியாலத்துக்கு மேல் இடம்பெற்ற தண்டனை விதிக்கும் விசாரணையில் எவ்வித உணர்ச்சியைக் காட்டாது இருந்ததுடன், இவ்வாண்டு ஜூனில் இடம்பெறுவதற்கு தீர்மானிகப்பட்டுள்ள மேன்முறையீடொன்றையும் மேற்கொண்டார்.
மெல்பேணிலுள்ள சென். பற்றிக் தேவாலயத்தில் ஜோர்ஜ் பெல் பேராயராக இருந்தபோது, 1996ஆம் ஆண்டு இறுதியிலும், 1997ஆம் ஆண்டு ஆரம்பத்திலும் இடம்பெற்ற ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின்போதே 13 வயதான சிறுவர்கலுக்கெதிரான குற்றங்கள், குறித்த தேவாலயத்தின் அறையொன்றிலும் விறாந்தையொன்றிலும் புரியப்பட்டிருந்தன.
பாதிக்கப்பட்ட ஒருவர் 2014ஆம் ஆண்டு இறந்தநிலையில், விசாரிக்கப்பட்ட, குறுக்கு விசாரணை செய்யப்பட்ட பாதிக்கப்பட்ட மற்றவர், தீர்ப்பில் தற்போது ஆறுதலடைய கடினமாக உள்ளதென, தனது வழக்கறிஞரூடாக விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்
38 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago