Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 09 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானியப் பிரதமர் சனானே தகைச்சியின் கூட்டணியானது வரலாற்றுத் தேர்தல் வெற்றியொன்றை ஞாயிற்றுக்கிழமை (08) பெற்றுள்ளது.
அந்தவகையில் உறுதியளிக்கப்பட்ட வரிக் குறைப்பு, சீனாவை எதிர்கொள்வதை இலக்காகக் கொண்ட இராணுவ செலவீனங்களுக்கு வழி கிடைத்துள்ளது.
ஜப்பானின் முதலாவது பெண் பிரதமரான, பிரித்தானியாவின் ‘இரும்புப் பெண்மணி’ மார்கரட் தட்சரால் உந்தப்பட்டதாகத் தெரிவிக்கும் கன்சவேட்டிவ் தகைச்சி, 465 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தின் கீழவையில் 316 ஆசனங்களை தனது லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு அளித்துள்ளார். இது அக்கட்சியின் சிறந்த பெறுபேறாகும்.
கூட்டணிக் கட்சியான இஷின் என அறியப்படுகின்ற ஜப்பான் புத்தாக்க கட்சியுடன் 352 ஆசனங்களை தகைச்சி கட்டுப்படுத்துவதோடு, மூன்றிலிரண்டு அறுதிப் பெறும்பான்மையையும் கொண்டிருக்கின்ற நிலையில், தான் பெரும்பான்மையைக் கொண்டிருக்காத மேலவையை அவர் மேவ முடியும்.
9 hours ago
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 Apr 2026