Editorial / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

வர்த்தகப் பேரம்பேசல்களில் ஈடுபடுவதற்கு வழியேற்படுத்தும் வகையில், புதிய தீர்வைகளை விதிப்பதிலிருந்து ஒதுங்கியிருப்பதற்கு, ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும் சம்மதித்துள்ளன. இதைத் தொடர்ந்து, “வர்த்தகப் போர்” என பொருளாதார நிபுணர்களால் வர்ணிக்கப்பட்ட போட்டி நிலைமை, இடைநிறுத்தப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆர்ஜென்டீனாவில் இடம்பெறும் ஜி20 மாநாட்டுக்காக அங்கு சென்றுள்ள ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும், இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்தே, இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் தொடர்பில் புதிய உடன்படிக்கையொன்றை 90 நாள்களுக்குள் எட்டும் வகையில், பேரம்பேசல்களை நடத்துவதெனவும், அதற்குள் புதிய தீர்வைகளை விதிப்பதைத் தவிர்ப்பதென்றும் முடிவுசெய்யப்பட்டது.
இதன்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், 200 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கான தீர்வைகளை அமுல்படுத்தும் யோசனையை, ஜனாதிபதி ட்ரம்ப் ஒத்திவைக்கிறார். மறுபக்கமாக, “மிகவும் கணிசமான” அளவு பெறுமதியான விவசாய, சக்தி, கைத்தொழில், ஏனைய துறைகளுக்கான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு, சீனா ஒத்துக்கொண்டது என, வெள்ளை மாளிகை தெரிவித்தது.
ஐ.அமெரிக்காவை முன்னிறுத்தும் கொள்கையுடன் ஜனாதிபதியாகத் தெரிவான ட்ரம்ப், தனது ஆட்சிக்காலத்தில் இதுவரை, சீனப் பொருட்களுக்கான இறக்குமதித் தீர்வைகளை அதிகரித்துள்ளார். அதற்குப் பதிலடியாக, ஐ.அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதித் தீர்வைகளை, சீனா அதிகரித்திருந்தது. உலகின் முக்கிய பொருளாதாரங்களாகக் கருதப்படும் ஐ.அமெரிக்காவும் சீனாவும் இவ்வாறு செயற்படுகின்றமை, உலகப் பொருளாதாரத்துக்குப் பாதிப்பாகக் கருதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 minute ago
5 minute ago
12 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
5 minute ago
12 minute ago
27 minute ago