Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொளுத்தும் வெப்பநிலைக்கு மத்தியில் சீனா முதல் தேசிய வறட்சி அவசரநிலையை அறிவித்தது.
சீனாவில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக கடந்த சனிக்கிழமை அன்று பல மாகாணங்களில் நான்கு அடுக்கு எச்சரிக்கையான சிவப்பு நிற எச்சரிக்கையை சீனா வானிலை மையம் விடுத்துள்ளது.
சீனாவில் கன்சு, ஷான்சி, ஹெனான், அன்ஹுய் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று வெப்ப நிலை அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து ஷான்சி, சிச்சுவான், சோங்கிங், ஹூபே, ஹுனான், அன்ஹுய், ஜியாங்சி மற்றும் ஜெஜியாங் பகுதிகளில் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வெப்பநிலையை எதிர்கொள்ள உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மக்களை தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்றும் தீ விபத்துகள் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை சீனாவின் பல மாகாணங்களில் 35 டிகிரி செல்சியஸ் தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் தற்போது சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago