2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

வறுமை காரணமாக தெருவோரத்தில் உணவு விற்கும் பிரபல ஊடகவியலாளர்

Ilango Bharathy   / 2022 ஜூன் 20 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
 ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த வருடம் அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து அந்நாட்டில் தலிபான்களின் ஆட்சி இடம் பெற்று வருகின்றது.

எனினும் உலக நாடுகள் பல ஆப்கானிஸ்தான் மீது பல தரப்பட்ட தடைகளை விதித்துள்ளதால் அந்நாட்டில்   கடுமையான பொருளாதார நெருக்கடியும் நிலவி வருகின்றது.
 

இந்நிலையில் தலிபான்களின்  ஆட்சியால் வேலையை இழந்த   மூசா முகமதி‘ என்ற பிரபல ஊடகவியலாளர் வறுமை காரணமாக ‘தெரு ஓரங்களில் உணவு பொருட்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
 
இது குறித்து இணையத்தில் வெளியான புகைப்படங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X