Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 செப்டெம்பர் 19 , மு.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர் கருவிகள் நேற்றைய தினம் நூற்றுக்கணக்கில் அடுத்தடுத்து வெடித்ததில் 12 பேர் உயிரிழந்த நிலையில். 3000 இற்கும் மேற்பட்டோர் வரை படுயாகம் அடைந்தனர்.
லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்தன.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில், நேற்று லெபனான் தெற்கு பகுதிகளிலும் தலைநகர் பெய்ரூட்டில் பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லாவிரின் தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .