2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வாங் யீ விஜயத்தால் உயரும் கடன்பொறி அச்சம்

Freelancer   / 2022 ஜனவரி 19 , பி.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதும் ஒமிக்ரான் மாறுபாட்டின் தொடர்ச்சியான அதிகரிப்புக்கு மத்தியில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு அண்மையில் விஜயம் செய்திருந்தார்.

எனினும், சீனாவால் வலுக்கட்டாயமாக கடன்-பொறி இராஜதந்திரத்தின் மூலம்  தங்கள் இறையாண்மை அழிக்கப்படுவதாக தேசியவாத இலங்கையர்களும் மாலைதீவிகளும் உணர்ந்ததால் லாபம் ஈட்ட முடியவில்லை என்று ஐரோப்பிய அடிப்படையிலான சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் முன்னர் செய்ததைப் போலவே, நாட்டின் மோசமான பொருளாதார நிலைமை சீனாவால் சுரண்டப்படக்கூடும் என்று குறிப்பாக இலங்கையர்கள் அச்சமடைந்துள்ளதாக தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இலங்கையைப் போலவே மாலைதீவுகளும் சீனாவின் பட்டுப்பாதை முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இதை அமெரிக்கா, சிறிய நாடுகளுக்கான "கடன் பொறி" என்று முத்திரை குத்தியுள்ளது. 

எனவே, சோலிஹ் தலைமையிலான ஆட்சி, இந்த ஆண்டு பரந்த இந்தோ-பசிபிக் முன்னேற்றங்களில் அதிக ஆர்வத்தைக் காட்டுவதன் மூலம் சீனாவுடனான சமன்பாட்டைச் சமன் செய்ய முயன்றது எனவும் விரைவில் நாட்டில் அமெரிக்காவின் முதல் இராஜதந்திர பணியை நடத்த வாய்ப்புள்ளதாக தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மாலைதீவுகள் விஜயத்தை முடித்த அமைச்சர் வாங் யீ, இலங்கைக்கு பறந்தார். ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு நவம்பர் 2021 இல் சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்தது, இது ஒரு மாத இறக்குமதியைத் தக்கவைக்க மட்டுமே போதுமானது.

மேலும், பெருகிவரும் கடன், நாணய நெருக்கடி மற்றும் உயர் பணவீக்கம் ஆகியவை சாத்தியமான இறையாண்மை இயல்புநிலை பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது. 

எனவே, சுற்றுலாவை ஊக்குவித்தல், முதலீடுகள் மற்றும் கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் அமைச்சர் வாங்கின் விஜயத்தின் போது விவாதிக்கப்பட்டன.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் வாங் யீ நடத்திய பேச்சுவார்த்தையின் போது, ​​பிராந்தியத்தில் சீனச் செல்வாக்கை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்தச் சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.  

உலகளாவிய அபிவிருத்திக்கான மையத்தின் கருத்துப் படி, சீனாவின் பட்டுப்பாதை முன்முயற்சியின் கீழ் இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகள் இரண்டும் கடன் நெருக்கடிக்கு ஆளாகின்றன. 

மாலைதீவுகள் மிகவும் பாதிக்கப்படக்கூடும் என்று கருதப்படுவதுடன்,, இலங்கை குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்படக்கூடியது என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தெற்காசிய ஆய்வுகளுக்கான ஐரோப்பிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .