Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கொரிய இராணுவத்தின் தகவல்படி, வாரமொன்றில் இரண்டாவது ஏவுகணை ஏவலாக தனது கிழக்கு கரையோரத்திலிருந்து இரண்டு குறுந்தூர ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது.
வொன்சான் பகுதியிலிருந்து இன்று (31) அதிகாலையிலேயே குறித்த இரண்டு ஏவுகணைகளும் ஏவப்பட்டிருந்தன.
வொன்சான் துறைமுகத்துக்கருகேயுள்ள கல்மா பகுதியிலிருந்து இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 1.36க்கும், நேற்று அதிகாலை 1.57க்குமே ஏவுகணைகள் ஏவப்பட்டன.
250 கிலோ மீற்றருக்குச் சென்ற ஏவுகணைகள், 30 கிலோ மீற்றர் உயரத்தை அடைந்து கிழக்குக் கடல் என அறியப்படுகின்ற ஜப்பானியக் கடலில் வீழ்ந்ததாக தென்கொரியாவின் பணியாட்தொகுதித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னைய மாதிரிகளிலிருந்து வேறுபட்ட வகையொன்றாக ஏவுகணைகள் அடையாளங் காணப்பட்டதாகத் தென்கொரிய பாதுகாப்பமைச்சர் ஜியோங் கையோங்-டூ கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த ஏவுகணை ஏவலைத் தொடர்ந்து ஜப்பானின் பாதுகாப்பில் எதுவிதத் தாக்கமுமில்லை என ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னும் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் சந்தித்த பின்னர் இடம்பெற்ற முதலாவது ஏவுகணை ஏவலாக கடந்த வார ஏவுகணை ஏவல் இடம்பெற்றிருந்தநிலையிலேயே தற்போது இந்த ஏவுகணைகள் ஏவல் இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், ஐக்கிய அமெரிக்காவுடனான தென்கொரியா திட்டமிட்டுள்ள இராணுவ ஒத்திகைகளுக்கான தனித்த எச்சரிக்கையே கடந்த வார ஏவுகணை ஏவல் என வடகொரியா தெரிவித்திருந்தததுடன், போரொன்றுக்கான தயார்படுத்தலாகவே இம்மாதம் இடம்பெறவுள்ள வருடந்தோறும் இடம்பெறுகின்ற இராணுவ ஒத்திகைகளை நோக்குவதாக தமது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தது.
கடந்த வாரம் வடகொரியாவால் ஏவப்பட்ட இரண்டு குறுந்தூர ஏவுகணைகளில் இன்று 690 கிலோ மீற்றர் பயணித்ததுடன், மற்றையது 430 கிலோ மீற்றர் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
40 minute ago
1 hours ago