Ilango Bharathy / 2021 டிசெம்பர் 23 , பி.ப. 02:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சால்மன் எனப்படும் ஒருவகை மீனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி தேநீர்க் கோப்பைகளைத் தாயாரிக்கும் முயற்சில் சீனாவிலுள்ள டியான்ஜின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் சூழல் மாசடைவதைத் தடுக்கவே இவ்வகை மீனின் விந்தணுக்களிலுள்ள DNAவைக் கொண்டு சில இரசாயனங்களை கலந்து பயோபிளாஸ்டிக் கப்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து கருத்துத் தெரிவித்த விஞ்ஞானிகள் ” பயோபிளாஸ்டிக்குகள் சோள மாவு, மரத்தூள் மற்றும் உணவுக் கழிவுகள் போன்ற கரிமப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
இவை பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாக இருந்தாலும் இவை சுற்றுசூழலுக்கு தகுந்ததாக உள்ளதா? என்பது சந்தேகமே. ஆனால் இதுபோன்ற விந்தணுக்களிலின் DNAவிலிருந்து உருவாக்கப்படும் கோப்பைகள் பாதிப்பை ஏற்படுத்தாது” என்றனர்.
மேலும் இவற்றை விரைவில் சந்தைப்படுத்த உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago