Editorial / 2018 மே 01 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளில், “வின்ட்ரஷ் தலைமுறை” என்பது, அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடராக மாறியுள்ளது.
கரீபியன் நாடுகளிலிருந்து, 1948ஆம் ஆண்டுக்கும் 1971ஆம் ஆண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில், ஐ.இராச்சியத்துக்கு வந்தோர், “வினட்ரஷ் தலைமுறை” என அழைக்கப்படுகின்றனர்.
இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து, ஐ.இராச்சியத்தில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, ஜமைக்கா, ட்ரினிடாட் அன்ட் டொபாக்கோ உள்ளிட்ட கரீபியன் நாடுகளிலிருந்து, 1948ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் திகதி, ஐ.இராச்சியம் நோக்கி வந்த “எம்.வி எம்பையர் வின்ட்ரஷ்” என்ற கப்பலை அடிப்படையாகக் கொண்டே, “வின்ட்ரஷ் தலைமுறை” என அவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு வந்தவர்கள் தொடர்பான வருகை விவரங்கள், 2010ஆம் ஆண்டு, உள்துறை அலுவலகத்தால் அழிக்கப்பட்டுள்ளன. ஆகவே, அவர்களின் சட்டபூர்வத் தன்மை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
தங்களின் சட்டபூர்வத் தன்மையை நிரூபிக்காதவர்களை, நாட்டிலிருந்து வெளியேற்றப் போவதாக ஐ.இராச்சியம் அறிவித்தமையே, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, இவ்விடயம், சர்வதேச அளவிலான கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
37 minute ago
58 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago
9 hours ago