S.Renuka / 2026 மார்ச் 23 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் நியூயோர்க் விமான நிலைய ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது எயார் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலத்த காயம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள நியூயோர்க்கின் லாகார்டியா விமான நிலைய ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் 39 கி.மீ வேகத்தில் வந்த போது மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.
பிறகு விமானத்தில் இருந்த பயணிகள் அவசரகால கதவுகள் வழியே பத்திரமாக மீட்கப்பட்டனர்.விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, மீட்புப் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன.
விமானத்தின் முன்பகுதி தீயணைப்பு வாகனம் மீது மோதி சேதம் அடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 4 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை நடந்து வருகிறது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
47 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
3 hours ago