2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

“வெள்ளை மாளிகை, பென்டகனை படம் எடுத்துள்ளோம்”

Freelancer   / 2023 நவம்பர் 28 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியா கடந்த வாரம் புதிய செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. விண்ணில் செலுத்தப்பட்ட வடகொரியாவின் முதல் உளவு செயற்கைகோள் இதுவாகும்.

இந்த செயற்கை கோள் உளவு பார்த்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

இந்த உளவு செயற்கை கோளானது அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் கடற் படை நிலையங்களின் புகைப்படங்களை எடுத்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

மேலும் ரோம்நகரம், குவாமில் உள்ள ஆண்டர் சன் விமானப்படை தளம், பேர்ல் துறைமுகம், அமெரிக்க கடற்படையின் கார்ல் வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகியவற்றையும் புகைப்படம் எடுத்துள்ளதாகவும். அந்த புகைப்படங்களை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் பார்த்துள்ளதாக அம்மாநிலத்தில் இருந்து வெளியாகும் அதிகாரப் பூர்வ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் வடகொரிய செயற்கைகோள் எடுத்து உள்ள புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X