2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

வேகமாக பரவும் இஸ்ரேலுக்கு எதிரான ‘ஹேஷ்டேக்’

Freelancer   / 2024 மே 30 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஃபா தற்காலிக முகாம் மீது கடந்த செவ்வாயன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37-க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, “ஓல் ஐஸ் ஒன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ரஃபாவின் பக்கம் உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது.

காசா - இஸ்ரேல் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் ஞாயிற்றுக்கிழமை (மே 26) குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இதையடுத்து, ரஃபா தற்காலிக முகாம் மீது செவ்வாயன்று இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 37 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் உலகளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையைக் குறிக்கும் வகையில், மேற்குறிப்பிட்ட ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், இதை பலரும், ஷேர் செய்து பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர்.

மேலும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மெக்சிகோவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியில் மோதல் ஏற்பட்டதால், பொலிஸார் இதனை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இது தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .