Ilango Bharathy / 2022 ஜனவரி 05 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவருக்கு வேறு வேறு ஆண்டில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த சம்பவம் அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த பாத்திமா மேட்ரிக்கல் - ராபர்ட் ட்ருஜில்லோ தம்பதிக்கே இவ்வாறு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.

இவர்களுக்கு ஏற்கனவே 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த பாத்திமாவுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அன்றிரவு11.45 மணியளவில் ஆண் குழந்தையொன்றும், மறுநாள் காலை 12 மணியளவில் பெண்குழந்தையொன்றும் பிறந்துள்ளது.
இது குறித்து கருத்துத் வைத்தியர்கள் ”சுமார் 20 லட்சத்திற்கு ஒரு குழந்தை இப்படியாக பிறக்க வாய்ப்பு உள்ளது ”எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த தம்பதியினர் அக்குழந்தைகளுக்கு அல்ஃப்ரீடோ, அய்லின் என பெயரிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago