Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜோர்ஜ் எச். புஷ், சுகவீனம் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
93 வயதாகும் இவரது இரத்தத்தில் பரவிய தொற்று காரணமாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ஹூஸ்டன் நகரில் உள்ள மெதடிஸ்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளாரென்றும் தற்போது அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள், உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய தொற்று காரணமாகவே, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
கடந்த 18ஆம் திகதியன்று, ஜோர்ஜ் புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் காலமானார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்றுத் திரும்பிய நிலையிலேயே, ஜோர்ஜ் புஷ்ஷுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 41ஆவது ஜனாதிபதியாக, ஜோர்ஜ் எச்.புஷ் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
37 minute ago
58 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago
9 hours ago