Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஜூலை 22 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவிட்சர்லாந்தில் உள்ள ‘zero star hotel ‘என அழைக்கப்படும் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறித்த ஹோட்டலானது வெளிப்புறச் சுவர்களற்று அமைக்கப்பட்டுள்ளமையே மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளமைக்கான காரணமாகும்.
சுவிட்ஸர்லாந்தின் வலைஸ் (Valais) என்கிற மாகாணத்தில் சைல்லோன் (Saillon) என்ற கிராமத்திலேயே இவ் ஹோட்டலானது அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவ் ஹோட்டலின் உரிமையாளரான ரிக்லின் (Riklin) என்பவர் கருத்துத் தெரிவிக்கையில்” குறைவான தேவைகளுடன் நிறைவுடன் வாழ மனிதர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
இவை குறித்தும் மக்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு ஹோட்டல் அமைக்கப்பட்டுள்ளது.
அறைகள் இல்லாத இந்த ஹோட்டல் இரண்டு பேர் படுக்கும் வசதி கொண்ட ஒரு கட்டில், அருகில் இரண்டு நாற்காலிகள், மேஜை, அவற்றில் விளக்குகள், காலை உணவு, பானம் உள்ளிட்டவற்றுடன் மட்டுமே அமைக்கப்பட்டு இருக்கிறது.
இங்கு ஒரு இரவு தங்குவதற்கான கட்டணம் 325 சுவிஸ் ஃப்ராங்குகள். இந்த சலுகை செப்டம்பர் 18-ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago