2026 மே 09, சனிக்கிழமை

dd

வொஷிங்டனுடனான பீஜிங்கின் வர்த்தக பேச்சு முடக்கம்

Freelancer   / 2022 மார்ச் 09 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் வருடாந்த பணி அறிக்கையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார ஒத்துழைப்பைப் பற்றிய எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை என்பதுடன், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுடனான வர்த்தகம் பற்றிய எந்தக் குறிப்பும் அறிவிக்கப்படவில்லை.

இராஜதந்திரத்துக்கான இந்த வருட அரசாங்க இலக்குகள் பெரும்பாலும் ஆசிய-பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சீனாவின் கண்டங்களுக்கு இடையேயான பட்டுப்பாதை முன்முயற்சி ஆகியவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தனது வருடாந்த பணி அறிக்கையை தேசிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கிய பிரதமர் லீ கெகியாங், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதிகரிக்கும் அபாயங்களை நாடு எதிர்கொண்டதாகக் கூறியதுடன், இராஜதந்திர செலவினங்களுக்காக மிதமான வளர்ச்சி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

பொருளாதாரத் தடைகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளால் சிக்கிய ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டு ஒப்பந்தத்தின் மூலம் அந்த ஒவ்வொரு நாடுகளுடனும் உறவுகள் குறைந்துவிட்டன.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர், அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையும் முடங்கியுள்ளது. ஒரு கட்ட வர்த்தக ஒப்பந்தத்தை பீஜிங் நிறைவேற்றவில்லை என்று வொஷிங்டன் குற்றம் சாட்டியுள்ளதுடன், சீனப் பொருட்கள் மீதான அமெரிக்க வரிகள் நடைமுறையில் உள்ளன.

இதேவேளை, இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைமுறைக்கு வந்த உலகின் மிகப்பெரிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கையான, பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டுறவைச் செயல்படுத்துவதை சமீபத்திய அறிக்கை பாராட்டியுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .