Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 14 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் இருவருடைய நெட்பிலிக்ஸ் தொடரின் முதல் பாகம் அண்மையில் வெளியானது.
அதில் ”கேட் மில்டனை இளவரசர் வில்லியம், காதலிக்கவில்லை. ராஜ குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதற்காகவே திருமணம் செய்தார்” என்றும் தெரிவித்தார்.
அத்துடன் தன் மனைவி மேகன் பற்றி அவர் கூறுகையில்,” நான் மேகனை சந்திப்பதற்கு சென்ற சமயத்தில் ஊடகங்கள் அவரை விரட்டுவது குறித்து நான் அச்சமடைந்தேன். என்னிடமிருந்து பலரை ஊடகம் விரட்டி விட்டது. என்னோடு என் உலகில் இணைவதற்கு மேகன் பலவற்றை தியாகம் செய்திருக்கிறார்.
அதன் பிறகு அவரின் உலகத்தில் என்னை இணைத்துக் கொள்ள என்னால் முடிந்த தியாகங்களை செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இளவரசர் ஹாரி, கேட்மில்டன் குறித்து தெரிவித்த கருத்தால் இளவரசர் வில்லியம் வருத்தமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
46 minute ago
17 May 2025