2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹிஜாப் விவகாரம்; பிரபல நடிகை கைது

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 20 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

`ஈரானில் அண்மையில் ஹிஜாப்பினை முறையாக  அணியவில்லை` எனக்  கூறி கைது செய்யப்பட்ட ‘மஹ்சா அமினி‘ என்ற இளம்பெண் பொலிஸார் தாக்கியதில் உயிரிழந்தார்.

இச்சம்பவமானது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஈரான் அரசுக்கு  எதிராக ஆயிரக்கணக்கானோர்  தொடர்  போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர்.

 அந்தவகையில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்கியதில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 18,000 பேரைப் பொலிஸார் கைது செய்த நிலையில், அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில்  அண்மையில் பாதுகாப்பு படை வீரர்களைக் கத்தியால் குத்தியதாகக்  குற்றம் சாட்டப்பட்ட 2 பேருக்கு சமீபத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஈரானைச்  சேர்ந்த புகழ்பெற்ற நடிகை தாரனே அலிதூஸ்டி போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தும் கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

 அப்பதிவில் அவர்  ஈரானின் மரண தண்டனைக்கு எதிராக பேசும்படி சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

 இந்நிலையில் போராட்டம் குறித்து பொய்யான தகவல்களைப்  பரப்பியதாக குற்றம் சாட்டி நடிகை தாரனே அலிதூஸ்டியை ஈரான் பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

 38 வயதான தாரனே அலிதூஸ்டி  பிரபல நடிகைகளில் ஒருவர் என்பதும், இவர் நடித்த 'தி சேல்ஸ்மேன்' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .