S.Renuka / 2025 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

கானா நாட்டில் நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் அரசின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
மேற்கு ஆபிரிக்க நாடான கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து, அந்நாட்டின் அஷாந்தி மாகாணத்தில் உள்ள ஒபுவாசி நகரத்துக்கு இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று புறப்பட்டது.
இந்த ஹெலிகொப்டரில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் பயணம் செய்துள்ளனர்.
ஹெலிகொப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விழுந்து நொறுங்கியுள்ளது.
இதையடுத்து, வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
இந்த ஹெலிகொப்டர் விபத்தில், கானாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா உட்பட 8 பேர் பலியானதாக, அந்நாட்டின் அரசின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago