Editorial / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டான் பிரவுனி, அர்ஜென் ஆல்பர்ஸ் ஆகியோர் யுடியூப் சேனலை நடத்தி வருகிறார்கள்.
உடற்பயிற்சி ஆர்வலர்களான இவர்கள் ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் அதிக முறை புல்- அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர்.
பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப்பில் உள்ள ஹொவெனன் விமான தளத்தில், ஹெலிகாப்டர் குறிப்பிட்ட அடி உயரத்தில் ஒரே நிலையில் அசையாமல் பறந்து கொண்டிருந்தபோது அடிப்பகுதியில் உள்ள கம்பியை பிடித்து கொண்டு புல்-அப்ஸ் செய்தனர்.
முதலில் அர்ஜென் ஆல்பர்ஸ், ஹெலிகாப்டரில் தொங்கியபடி ஒரு நிமிடத்தில் 24 முறை புல்-அப்ஸ் எடுத்தார். இதனால் முன்பு 23 முறை புல்-அப்ஸ் எடுத்திருந்த அர்மேனியாவின் ரோமன் சஹ்ரத்யனின் சாதனையை முறியடித்தார்.
அர்ஜென் ஆல்பரிசுக்கு பிறகு 2 ஆவதாக ஸ்டான் பிரவுனி ஹெலிகாப்டரில் தொங்கியபடி புல்-அப்ஸ் எடுத்தார். அவர் ஒரு நிமிடத்தில் 25 முறை புல்-அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026