Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 28 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
2020ஆம் ஆண்டு, தேசிய பாதுகாப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஹொங்கொங்கில் சிவில் சமூகத்திற்கான இடம் வெகுவாக சுருங்கிவிட்டது என்று டோக்கியோவில் உள்ள மெய்ஜி பல்கலைக்கழகத்தின் ஒப்பீட்டு சட்ட நிறுவகத்தின் ஆராச்சியாளர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஹொங்கொங் மக்களின் சுதந்திரத்தை தன்னிச்சையாக கட்டுப்படுத்த புதிய சட்டம் அனுமதித்தது என்று குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த இரண்டு தசாப்தங்களில், நான் ஒரு நீதிமன்ற செய்தியாளராகவும் சர்வதேச மன்னிப்புச்சபை மற்றும் சுதந்திர சீன பென் மையம் ஆகிய அரசு சாரா நிறுவனங்களில் பணியாளராகவும் பணியாற்றினேன்.
அப்போது ஹொங்கொங் சிவில் சமூகம் துடிப்பாக இருந்தது. மன்னிப்புச் சபை மற்றும் சுதந்திர மையம் ஆகியவற்றில் நான் பணியாற்றியபோது, ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்ப்பாளர்களை விடுவிக்க அழைப்பு விடுப்பது மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் ஹொங்கொங்கில் உள்ள அவர்களது சேவை பெறுனர்களை வழக்கறிஞர்கள் சந்திக்க ஏற்பாடு செய்வது போன்ற அனைத்து வகையான நடவடிக்கைகளையும் நாங்கள் ஏற்பாடு செய்ய முடிந்தது.
நாங்கள் எந்த இடையூறுகளையும் அனுபவித்ததில்லை அல்லது எந்த அச்சுறுத்தலையும் அனுபவித்ததில்லை.
சர்வதேச மன்னிப்புச் சபையில் நான் ஆராய்ச்சியாளராக இருந்தபோது கூட, சீன எதிர்ப்பாளர்களின் தடுப்புக்காவல் அல்லது அரசியல் மறுகல்வி முகாம்களில் உய்குர் மற்றும் கசாக் இனத்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டதை ஆவணப்படுத்தியபோது எனது பாதுகாப்பைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட்டதில்லை.
ஹொங்கொங்கிற்கு வந்தவுடன் "இறுதியாக சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும்" என்று ஒரு சீனப் பெருநிலப்பரப்பை சேர்ந்தவர் என்னிடம் கூறியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
கடந்த காலங்களில், காவல்துறை அதிகாரிகள் நட்பாக இருந்தனர் மற்றும் போராட்ட வழிகளை அமைப்பாளர்களுடன் கூட கலந்துரையாடுவர்.
பொலிஸ் அனுமதியின்றி வெளிப்படையான பேரணிகள் இடம்பெற்றன. ஏனெனில், திட்டங்களைப் பற்றித் தெரிவித்தவுடன், தடையில்லாக் கடிதங்கள் வெளியிடப்படும்.
ஆனால் இன்று, விக்டோரியா பார்க் போன்ற பொது இடங்களில், வருடாந்தம் ஜூன் 4 அன்று தியனன்மென் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்துபவர்கள், பொலிஸாரால் விசாரிக்கப்படுவதுடன், அவர்கள் கலைந்து செல்லாவிட்டால் அவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்றுகூடியதாகக் குற்றம் சாட்டப்படும் என்றார்.
ஒரு முன்னாள் நீதிமன்ற செய்தியாளராக, ஹொங்கொங் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன்.
பீஜிங்கின் உத்தியோகபூர்வ பிரதிநிதி அலுவலகத்தின் முன்பாக மற்றும் இடங்களில் சிறிய அளவிலான போராட்டங்களை நடத்தியதற்காக பொது இடத்தில் இடையூறு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எதிர்ப்பாளர்களின் பல வழக்கு விசாரணைகளை எழுதியுள்ளேன்.
அப்போது பலருக்கு பிணை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது, பிணைமனுக்கள் குறித்த விவரங்களை தெரிவிப்பது கூட நீதிமன்றங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வன்முறையற்ற குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதிகள் பல ஆண்டுகளாக விசாரணைக் காவலில் உள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹொங்கொங்கின் அமைப்பில் பெருநிலப்பரப்பு மேலும் எவ்வாறு அனைவருக்கும் அதிக சிக்கல்களை உருவாக்கும் என்பதை கற்பனை செய்வது எளிது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
18 minute ago
28 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
56 minute ago
2 hours ago