2025 ஜூலை 16, புதன்கிழமை

தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிக்கு திருமலையிலிருந்து 25 பேர் தகுதி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
 
எதிர் வரும் மே மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதி வரையும் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் சம்பியன் போட்டிக்கு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 25 போடடியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக திருகோணமலை மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் செயலாளர் எஸ்.விஜேயனீதன வெள்ளிக்கிழமை (25)  தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு திருகோணமலையில்  நடைபெற்ற மாவட்ட ரீதியான மெய்வல்லுநர் சம்பியன் போட்டியில் 43 பாடசாலைகளைச் சேர்ந்த 700 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் இருந்து தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிக்காக 18 ஆண்களும் 07 பெண்களுமாக மொத்தம் 25 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
சம்மந்தப்பட்ட சகல பாடசாலை அதிபர்களுக்கும் இந்த விடயம் தொடர்பாக எழுத்து மூலம் அறிவிக்கப்படடிருப்பதாகவும் போட்டியாளர்கள் மற்றும் அவர்களுடன் வருகின்ற பயிற்சியாளர்களின் தங்குமிட வசதி உட்பட ஏனையை விடயங்கள் தொடர்பாக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்கு 0776622289 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .