2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வலைப்பந்தாட்ட நடுவர்களுக்கான எழுத்துப் பரீட்சையில் 16 பேர் சித்தி

Kanagaraj   / 2014 ஜனவரி 04 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தினால் நடத்தப்பட்ட ஏ மற்றும் பி தர வலைப்பந்தாட்ட நடுவர்களுக்கான எழுத்துப் பரீட்சையில் வடமாகாணத்தில் 16 பேர் சித்தியடைந்துள்ளதாக யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கச் செயலாளர் செல்வி சி.சுரேந்தினி தெரிவித்தார்.

இதில், 'ஏ' தரப் பரீட்சையில் அ.பவானி, ம.மதிவதனன், இ.சசிக்குமார், ர.ஸ்ரீரமணன், ந.மதியழகன், அ.கமலக்குமரன், ப.ஜெயகரன், ஆகிய 7 பேரும் சித்தியடைந்துள்ளனர்.

'பி' தரப் பரீட்சையில் து.கௌரி, ந.செந்தூரன், பொ.சகிலன், ச.சியாமா, ச.மைதிலி, கெ.செந்தில்குமரன், எஸ்.கரன், ஜெ.சுதாகரன், ஏ.பிரபாகரன் ஆகிய 9 பேரும் சித்தியடைந்துள்ளனர்.

சித்தியடைந்த 16 பேருக்கும் செயன்முறைப் பரீட்சை நடைபெறவுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X