.jpg)
UTE அனுசரணையில் இடம்பெற்ற இலங்கை திறந்த கொல்ஃவ் சம்பியன்சிப் 2013 போட்டியில் என். பிரபாகரன் வெற்றி பெற்றிருந்தார். இரண்டாமிடத்தை என். தங்கராஜா தனதாக்கிக் கொண்டார். ஏழு தடவைகள் வெற்றியீட்டியவரும் கடந்த ஆண்டு சம்பியனுமான அனுர ரோஹண மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டார். 1970 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் திடீரென இடம்பெறும் விளையாட்டு போட்டி (‘sudden-death play-off’) முதல் தடவையாக இந்த ஆண்டு இலங்கை திறந்த கொல்ஃவ் சம்பியன்சிப் போட்டிகளில் இடம்பெற்றிருந்தது.
2013ஆம் ஆண்டுக்கான சம்பியன்சிப் போட்டிகள் 2014ஆம் ஆண்டின் முற்பகுதியில் இடம்பெற்றிருந்தன. வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் உள்நாட்டு வீரர்கள் கடந்த ஆண்டின் இறுதி பகுதியில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக, கடந்த ஆண்டின் இறுதியில் இடம்பெற்றிருக்க வேண்டிய இந்த போட்டி 2014 இல் நடைபெற்றது.
இந்த போட்டியில் நான்காமிடத்தை மித்துன் பெரேரா பெற்றிருந்ததுடன், எம்.ஆறுமுகம் மற்றும் லலித் குமார ஆகியோர் முறையே 5 ஆம் மற்றும் 6ஆம் இடங்களை தமதாக்கியிருந்தனர். சிறந்த இளம் வீரராக தெரிவாகிய சஃவ்வார் சிக்கந்தர் ஏழாமிடத்தை கே.சந்திரதாச மற்றும் சிசிர குமார ஆகியோருடன் பகிர்ந்திருந்தார்.
விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டிகளைத் தொடர்ந்து, வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு விளையாட்டு போட்டியின் பிரதான அனுசரணையாளர்களான UTE நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாத் இஸ்மைல், இலங்கை கொல்ஃவ் கழகத்தின் தலைவர் லால் டயஸ், கழகத்தின் தலைவரான நிமல் பியரட்ன, UTE நிறுவனத்தின் தலைவர் பிரியத் பெர்னான்டோ மற்றும் திருமதி ஜேசுதாசன் ஆகியோர் பங்களிப்புடன் இடம்பெற்றது.
UTE-Cat ஸ்ரீலங்கா திறந்த போட்டிகள், இலங்கை கொல்ஃவ் யூனியன் மூலம் அதன் செயலாளர் நாயகம் அனா புஞ்சிஹேவா அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது. ரோயல் கொழும்பு கொல்ஃவ் கழகத்தின் ஜகத் மற்றும் மஹிந்த ஆகியோரின் பங்களிப்பும் இந்த போட்டிகளின் ஏற்பாட்டின் போது வழங்கப்பட்டிருந்தது.