2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

தேசிய கராத்தே போட்டியில் மட்டு.மாணவர்களுக்கு 7 பதக்கங்கள்

Kogilavani   / 2014 மே 02 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜப்பான் சொட்டக்கான் கராத்தே அமைப்பின் சிறிலங்கா கிளையினால் நடத்தப்பட்ட 7வது தேசிய கராத்தே சம்பியன் போட்டியில் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின்  மாணவர்கள் 7 பேர் பதக்கங்கள் பெற்றுள்ளனர்.

கொழும்பு சுகந்ததாச உள்ளக விளையாட்டு அரங்கில்  கடந்த 26 ஆம் திகதி இப்போட்டி நடத்தப்பட்டது.

ஜப்பான் சொட்டக்கான் கராத்தே அமைப்பின் பிரதம போதனாசிரியரும் இலங்கைக்கிளைத் தலைவருமான  சிஹான்  கே.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், ஜப்பானிய இலங்கைத் தூதரகத்தின் முதல் நிலைச் செயலாளர் டைஜி சசாய் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

இப்போட்டியில் 1200 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குப்பற்றினர். இவர்களில் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின்  8 மாணவர்கள் பங்கு பற்றி 7 பதக்கங்களைப் பெற்றனர். இவற்றுள் 2 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்களும் அடங்கும்.

கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் மாணவர்களின் பயிற்சியாளராக  கே.குககுமாரராஜா ( ஆசிரியர் மட்ஃ மகாஜனக் கல்லூரி, தேசிய கராத்தே தீர்ப்பாளர்) கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இப்போட்டியில் சென்சி.கே.கேந்திரமூர்த்தி, சென்சி ஆப்டின், சென்சி.கே.குககுமாரராஜா, சென்சி.எஸ்.முருகேந்திரன் ஆகியோரின் கீழ் பயிற்றுவிக்கப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு போட்டியாளர்கள் 37 பதக்கங்களை வென்றனர்.

இதில் தங்கம், வெள்ளி, பித்தளை பதக்கங்கள் அடங்குகின்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X