2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஹொக்கி சங்கத்தில் மேலும் 3 யாழ். பாடசாலைகள் இணைவு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 10 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.  மாவட்ட பாடசாலைகள் ஹொக்கிச் சங்கத்தில் மேலும் 3 புதிய பாடசாலை அணிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாடசாலைகள் ஹொக்கிச் சங்கத்தின் செயலாளர் பா.தர்மகுமாரன் தெரிவித்தார்.

தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட ஸ்ரீ நயினாதீவு கணேசா மகாவித்தியாலம், வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட மானிப்பாய் சர்வதேச பாடசாலை, சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆகிய பாடசாலைகளே புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.

ஏற்கனவே யாழ்.மாவட்ட ஹொக்கிச் சங்கத்தில் உடுவில் மகளிர் கல்லூரி, கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை, குளமங்கால் ஜி.ரி.எம்.எஸ், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, யாழ்ப்;பாணம் மத்திய கல்லூரி, சென்.ஜோன்ஸ் கல்லூரி, மானிப்பாய் இந்து கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி ஆகிய 9 பாடசாலைகள் இருக்கின்றதாகத் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X