2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

யுனிவர்ஸ் கழகத்தின் 18ஆவது ஆண்டு நிறைவு போட்டிகள்

Super User   / 2014 மே 18 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 18ஆவது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி சனிக்கிழமை (17) மசூர் மௌலானா விளையாட்டு அரங்கில் யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கே.றிஸ்வி யஹ்ஸர் தலைமையில் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றன.

கிரிக்கெட் போட்டியில் யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகமும், மருதம் விளையாட்டுக் கழகமும், கால்பந்தாட்டப் போட்டியில் ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகமும், யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.

கிரிக்கெட் போட்டியில் யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகமும், கால்பந்தாட்டப் போட்டியில் ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகமும் வெற்றியை தனதாக்கி கொண்டன.

இப்போட்டிக்கு அல் ஹாஜ் லயன் சித்தீக் நதீர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர், மற்றும் செலிங்கோ முகாமையாளர் கே.எம்.சறூக் கால்பந்தாட்ட சுற்றுத் தவிசாளர் யூ.எல்.றமீஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு வெற்றியீட்டிய கழகங்களிற்கான வெற்றிக் கேடயம், பணப்பரிசில் என்பனவற்றை வழங்கி வைத்தனர்.
 





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X