2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சென்ரல் அணி 2 ஓட்டங்களால் வெற்றி

Kogilavani   / 2013 டிசெம்பர் 31 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா 

நியுஸ்டார்ஸ் இருபது – 20 போட்;டியில் யாழ்.சென்ரல் விளையாட்டுக்கழகம் 2 ஓட்டங்களால்; வெற்றிபெற்றது.

யாழ்.நியுஸ்டார்ஸ் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தின் அனுசரணையுடன் யாழ்.மாவட்ட துடுப்பாட்ட அணிகளுக்கிடையில் லீக் முறையிலான இருபது – 20 துடுப்பாட்டப் போட்டிகளை நடத்தி வருகின்றது. 

கடந்த (29) கொக்குவில் இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற போட்டியொன்றில் யாழ்.சென்ரல் விளையாட்டுக்கழக அணியினை எதிர்த்து தெல்லிப்பழை கிறாஸ் கொப்பர்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதியது. 

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்ரல் விளையாட்டுக் கழகம் 20 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் ரஜீவ்குமார்; 85, றொசான் 42 ஓட்டங்களையும் அணிக்காகப் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் கிறாஸ் கொப்பர் அணி சார்பாக அஜித் 2 (30) இலக்குகளைக் கைப்பற்றினார்.

151 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கிறாஸ் கொப்பர் அணி வெற்றிக்காக கடுமையாகப் போராடியது. எனினும் சென்ரல் அணியின் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சினால் இறுதி நேரத்தில் 2 ஓட்டங்களால் கிறாஸ் கொப்பர் அணியின் வெற்றி பறிபோனது. 

இறுதியில் 20 பந்துபரிமாற்றங்களை முழுமையாக எதிர்கொண்டு 8 இலக்குகளை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக கபிலன் 56, நிலோசன் 34, ரகீம் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்ரல் விளையாட்டுக் கழக அணி சார்பாக ரஜீவ்குமார் 3 (24), றொசான் 3 (30), ஜெசிந்தன் 2 (21) இலக்குகளையும் கைப்பற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X