2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கோல் காப்பாளர்களுக்கான 3 நாள் பயிற்சி

Super User   / 2014 ஜனவரி 09 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை கால்பந்தாட்ட லீக்கின் எற்பாட்டில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் கோல் காப்பாளர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. இதில் விளையாட்டு கழகங்கள் மற்றும் பாடசாலைகளை சேர்ந்த சுமார் 50 வீரர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவி தொழிநுட்ப பணிப்பாளர் (கோல் காப்பு) டாமோதரன் சந்திரசிறியும் இளைஞர்  கோல்காப்பு பயிற்றுவிப்பாளர் செகான் சில்வெராவும் இந்த பயிற்சில் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
பயிற்சி முடிவில் பங்குபற்றுநர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X