2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சுழிபுரம் விக்டோரியா 5 ஆவது தடவையாகச் சம்பியன்

Super User   / 2014 ஜூன் 03 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகரத்தினம் கனகராஜ், குணசேகரன் சுரேன்


வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளின் மென்பந்துத் துடுப்பாட்ட போட்டியில் யாழ். சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி பெண்கள் அணி தொடர்ந்து 5 ஆவது தடவையாகச் சம்பியனாகியது.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் 5 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றன.

முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று முடிந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்டப்போட்டிகள் வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.

3 ஆம் கட்டப் போட்டிகளில் 19 வயதுப்பிரிவினருக்கிடையிலான மென்பந்துத் துடுப்பாட்டப் போட்டிகளில் பெண்களுக்கான போட்டிகள் ஓமந்தை மத்திய கல்லூரியிலும், ஆண்களுக்கான போட்டிகள் வவுனியா நகர சபை மைதானத்திலும் இடம்பெற்றன.

தொடர்ந்து 5 ஆவது தடவையாக வடமாகாணச் சம்பியனாகிய சுழிபுரம் விக்டோரியா


பெண்களுக்கான மென்பந்தாட்ட இறுதிப்போட்டியில் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணியினை எதிர்த்து வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் விக்டோரியா அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துபரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 70 ஓட்டங்களை எடுத்தது.

பதிலளித்தாடிய வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 49 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதனால் 21 ஓட்டங்களால் விக்டோரியா அணி வெற்றிபெற்றது.

மூன்றாமிடத்திற்கான போட்டியில் வட்டு இந்துக் கல்லூரி அணி 3 இலக்குகளால் வவுனியா றம்பைக்குளம் மகா வித்தியாலய அணியினை வென்றது.

ஆண்கள் மென்பந்தில் ஆதிக்கம் செலுத்திய மன்னார்


ஆண்களுக்கான மென்பந்து இறுதிப்போட்டியில் தலைமன்னார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அணியினை எதிர்த்து யாழ்;.உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தலைமன்னார் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்தாடிய உடுப்பிட்டி அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 58 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதனால் 10 ஓட்டங்களால் தலைமன்னார் அணி வெற்றிபெற்றது.

மூன்றாமிடத்திற்கான போட்டியில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய அணி 4 இலக்குகளால் மன்னார் சென்.சேவியர் அணியினை வீழ்த்தி 3ஆம் இடத்தினைத் தட்டிச் சென்றது.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .