2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

மெதடிஸ்த 200 ஆண்டு நிறைவு கிரிக்கெட் போட்டி

Super User   / 2014 ஜூன் 15 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லுரியின் 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய நிகழ்வுகளில் ஒன்றாகிய  கல்லூரியின் பழைய மாணவர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை (15) மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.

கல்லூரியின் ரில்லர் மற்றும் ரொக் அணிகளுக்கிடையிலான போட்டி மைதானத்தில் ஆரம்பமானது.

கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் ஆரம்பமான இப்போட்டிக்கு பிரதம அதிதிகளாக ஓய்வு பெற்ற அரச அதிபர் ஏ.கே.பத்மநாதன், விசேட அதிதிகளாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.லவகுமார், காத்தான்குடி மத்திய கல்லூரி பிரதி அதிபர் எஸ்.எச்.பிரதவுஸ், சிரேஸ்ட உடற்கல்வி அசிரியர் ரி.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X