2025 ஜூலை 16, புதன்கிழமை

சோபர் கழகம் 2014ம் ஆண்டின் சம்பியனாக தெரிவு

Super User   / 2014 ஏப்ரல் 27 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அட்டாளைச்சேனை பிரதேச கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழாப் போட்டிகளின் 2014ம் ஆண்டிற்கான சம்பியனாக அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகம் தெரிவானது.

அட்டாளைச்சேனை அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் 13 விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் கடந்த 05.04.2014 திகதி முதல் நடைபெற்று வந்த இவ்விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு சனிக்கிழமை (26) இடம்பெற்றது.

இப்போட்டி நிகழ்ச்சிகளில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக்கழகம் 09வது தடவையாக சம்பியன் கிண்ணத்தை தன்வசமாக்கிக்கொண்டது.

இரண்டாவது இடத்தை இலவன் ஸ்டார் விளையாட்டுக்கழகமும், மூன்றாவது இடத்தை யங்ளைன்ஸ் விiயாட்டுக் கழகமும் பெற்றுக்கொண்டன.

பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சுகாதாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோரும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் விசேட அதிதியாக பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .