2025 ஜூலை 23, புதன்கிழமை

ஜொனியன்ஸ் அணி 4 இலக்குகளால் வெற்றி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்


யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் ஜொனியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இ.சபாரட்ணம் வெற்றிக்கிண்ணத்திற்காக சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கும் ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டிகள் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து வருடாவருடம் இப்போட்டியில் இரு அணிகளும் மோதவுள்ளன.

50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்தத் துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில், முதல் வருடச் சம்பியன் பட்டத்தினை ஜொனியன்ஸ் அணி 4 இலக்குகளால் பெற்றுக்கொண்டது.

சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயச்சுழற்சியில் ஜொனியன்ஸ் அணி வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பினைத் தெரிவு செய்தது.

அதற்கிணங்கக் களமிறங்கிய சென்றலைட்ஸ் அணி 33.2 பந்துப் பரிமாற்றங்களில் 116 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் எம்.மயூரன் 25 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

ஜொனியன்ஸ் அணி சார்பாக பந்துவீச்சில் ஜி.சிறிதரன் 33 ஓட்டங்களுக்கு 4 இலக்குகளை வீழ்த்தினார்.

117 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய ஜொனியன்ஸ் அணி, 23.1 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் சி.அகிலன் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சென்;றலைட்ஸ் அணி சார்பாக எஸ்.சாள்ஸ் 13 ஓட்டங்களுக்கு 3 இலக்குகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த களத்தடுப்பாளர் விருதுகளை முறையே ஜொனியன்ஸ் அணியின் முறையே சி.அகிலன், ஜி.சிறிதரன், டபிள்யு.ரஜீவன் ரட்ணம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன் சகலதுறை ஆட்டக்காரராக சென்;றலைட்ஸ் அணியின் எம்.மயூரனும் போட்டியின் ஆட்டநாயகனாக ஜொனியன்ஸ் அணியின் ஜி.சிறிதரனும் தெரிவு செய்யப்பட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .