2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கல்முனையில் கிரிக்கெட் போட்டி

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகமானது,  இலங்கையின் 66ஆவது சுதந்திரதினத்தையொட்டியும் கழகத்தின் கடின பந்து பிரவேசத்தின்  5ஆவது  வருட பூர்த்தியையொட்டியும்  ஏற்பாடு செய்த நாற்பதுக்கு  40  கிரிக்கெட் போட்டி கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.

20 ஓவர்கள் இரண்டு இன்னிங்ஸ்களாக இடம்பெற்ற மேற்படி போட்டியில் கல்முனை லெஜன்ஸ் மற்றும் நிந்தவுர் லகான் விளையாட்டுக் கழகங்கள் கலந்து கொண்டன. முதலில்  இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பெடுத்தாட்டத்தில் ஏ.ஏ.எம்.நிஸாத் 32 பந்து வீச்சுகளுக்கு 49 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நிந்தவுர் லகான் விளையாட்டுக்கழகம் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 109 ஓட்டங்களைப் பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸ் 20 ஓவர்களில் துடுப்பெடுத்தாடிய கல்முனை லெஜன்ஸ் அணியினர் 05 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 151 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பெடுத்தாட்டத்தில்  ஏ.எல்.எம்.மனாசீர் 48 பந்துகளுக்கு 77 ஓட்டங்களைப் பெற்றார்.

இரண்டாவது இன்னிங்ஸின் 20 ஓவர்களுக்காக நிந்தவுர் லகான் விளையாட்டுக்கழகம் 162 என்ற வெற்றி அடைவதற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடி 6 விக்கெட்டுக்கள்  இழப்பிற்கு 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இதனடிப்படையில் இப்போட்டியில் கல்முனை லெஜன்ஸ் அணியனர் 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக கல்முனை லெஜன்ஸ் அணியைச் சேரந்த ஏ.எல்.எம்.மனாசீர் தெரிவு செய்யப்பட்டார்.

இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X