
இலங்கை கால்பபந்தாட்ட சம்மேளனம் நடாத்திவரும் கார்கில்ஸ் பூட்சிற்றி FA கிண்ண போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதன் அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபை, ரட்னம், இலங்கை ராணுவம், இலங்கை கடற்ப்படை அணிகள் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.
நேற்றைய தினம் நடைபெற்ற காலிறுதி முன்னோடிப்போட்டிகள் நான்கும் சமநிலையில் நிறைவைடைந்தன. போட்டியின் முடிவை தீர்மானிக்கும் முறையின் கீழ் (Tie Breaker) போட்டிகள் முடிவு காணப்பட்டன. இந்த போட்டிகளில் முக்கியமான அதிர்ச்சி வைத்தியம் வழங்கப்பட்ட போட்டியாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை விமானப்படை அணிகளுக்கிடையிலான போட்டி அமைந்தது. யாரும் எதிர்பாராத விதமாக இலங்கை போக்குவரத்து சபை அணி போட்டியை கோல்கள் இன்றி சமப்படுத்தி பின்னர் 6 : 5 என்ற சமநிலை முறியடிக்கும் முறை மூலமாக வெற்றி பெற்றனர்.
இலங்கை ராணுவ அணி அநுராதபுர சொலிட் அணியை 2 : 2 என சமப்படுத்தி பின்னர் 4 : 3 என்ற சமநிலை முறியடிக்கும் முறை மூலமாக வெற்றி பெற்றனர். ரட்ணம் அணி அப் கன்றி லயன்ஸ் (Up Country Lions) அணியிடம் பெருத்த சவாலை எதிர் கொண்டனர். இரு அணிகளும் ஆட்ட நேர முடிவில் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றனர். இது அப் கன்றி லயன்ஸ் அணியின் பெரும் சாதனை என்று கூற முடியும். இறுதியில் ரட்ணம் அணி 5 : 4 என்ற சமநிலை முறியடிக்கும் முறை மூலமாக வெற்றி பெற்றது. இன்னுமொரு போட்டி இலங்கை கடற்ப்படை மற்றும் களுத்துறை பார்க் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. விறு விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு கோள்களைப் பெற்றனர். சமநிலை முறியடிக்கும் முறை மூலமாக 4 : 3 என்ற அடிப்படையில் இலங்கை கடற்ப்படை அணி வெற்றி பெற்றது.