2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

திவிநெகும சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா

Super User   / 2014 ஏப்ரல் 29 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


திவிநெகும சித்திரைப் புத்தாண்டு விiயாட்டு விழா திருக்கோவில் பிரதேச செயலகத்தின் திவிநெகு திணைக்களப் பிரிவின் ஏற்பாட்டில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (27) இடம்பெற்றது.

இவ்விளையாட்டு விழாவில் திருக்கோவில் பிரதேச மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெறுமதிமிக்க பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இதன் போது பலூன் உடைத்தல், பணிஸ் சாப்பிடுதல், சாக்கு ஓட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் இடமபெற்றதுடன் அதிகளவிலான பொதுமக்களும் இதனை கண்டு கழித்தனர்.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கணக்காளர் கே.கேசவன் திவிநெகும திணைக்களத்தின் மாவட்ட காரியாலய முகாமையாளர் எஸ்எம். சலீம், தலைமைப்பீட முகாமையாளர் வீ.அரசரத்தினம், காஞ்சிரங்குடா பதில் இராணுவப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X