Kogilavani / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
தென்கொரிய நட்புறவுக் கிண்ணத்துக்காக இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனம் கால்பந்தாட்ட லீக்குகளின் 19 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையில் நடத்திவரும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில், மன்னார் லீக் அணி வெற்றிபெற்றுள்ளது.
இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (04) மாலை நடைபெற்ற போட்டியில் மன்னார் லீக் அணியும் வலிகாமம் லீக் அணியும் மோதின.
முதற் பாதியாட்டத்தில் மன்னார் லீக் அணி 1 கோலைப் பெற்று முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியாட்டத்தில் வலிகாமம் லீக் அணி ஒரு கோல் பெற்று ஆட்டத்தை சமநிலை செய்தது. எனினும், தொடர்ந்து சிறப்பாக ஆடிய மன்னார் அணி மேலும் ஒரு கோல் பெற்று வெற்றியை உறுதி செய்தது.
இறுதியில் மன்னார் லீக் அணி 2:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago