Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 22 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கதிரவன்
திருகோணமலை உவர்மலையைச் சேர்ந்த அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை, 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நான்கு தங்கப்பதக்கத்தை தனதாக்கி கொண்டுள்ளார். இலங்கை முதியோர் மெய்வல்லுநர் சங்கம் மத்திய மாகாண வளர்ந்தோர் மெய்வல்லுநர் சங்கத்தினருடன் இணைந்து நடத்திய 9ஆவது வருடாந்த போட்டி, கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்றது. இதில் 5000 மீற்றர் வேகநடை, 100 மீற்றர், 200 மீற்றர், ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கு கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளார்.
05.09.1924ஆம் ஆண்டு மட்டக்களப்பில் பிறந்த அல்பிரட் நோயல் செல்லப்பிள்ளை, தனது பாடசாலைக் கல்வியை மட்டு புனித மிக்கேல் கல்லூரியில் மேற்கொண்டார். 13 வயதில் திறந்த விளையாட்ட போட்டிகளில் மரதன் ஓட்டத்தில் பங்கு கொண்டு தனது விளையாட்டு வெற்றியினை ஆரம்பித்தார். பாடசாலை மட்டத்திலும் திறந்த மட்டத்திலும் நடத்தப்படும் மரதன் ஓட்டத்தில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வெற்றிகளை தனதாக்கி கொண்டார்.
24 வயதில் அரச சேவையில் இணைந்து கொண்ட இவர் கண்டி, பதுளை, மட்டக்களப்பு. அம்பாறை மாவட்டங்களில் கச்சேரியில் இலிகிதராக பணியாற்றினார். 1964ஆம் ஆண்டு திருகோணமலை கடற்படைத்தளத்தில் சிவில் அலுவலகத்தில் கணக்கு பரிசோதகராக பணி உயர்வு பெற்று சேவையாற்றி 1974ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுக் கொண்டார்.
6 ஆண் பிள்ளைகளின் தந்தையாகிய இவர் தொடர்ந்து விளையாட்டு துறையில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார். 2014ஆம் ஆண்டு நுவரெலியாவில் நடைபெற்ற போட்டியிலும் 5000 மீற்றர் வேகநடை, 100 மீற்றர், 200 மீற்றர் நீளம் பாய்தல் போட்டிகளில் பங்கு கொண்டு தங்கப்பதக்கத்தை பெற்றிருந்தார். 2015ம் வரும் தனது சுகயீனம் காரணமாக வேக நடை போட்டியில் மாத்திரம் பங்கு கொண்டு முதலிடம் பெற்றிருந்தார்.
இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் அல்பிரட் நொயல் செல்லப்பிள்ளை வரங்கால சமுதாயம் விளையாட்டு துறையில் ஆர்வம் கொண்டு மாவட்டத்திற்கும். நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் இளையவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார். அடுத்த வருடம் பங்குனி மாதம் கொழும்பில் நடைபெற உள்ள அடுத்த போட்டிக்கு தன்னை தயார் படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ள அவர் இப்போட்டியில் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து பல முதியவர்களை அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jul 2025
04 Jul 2025