2025 ஜூலை 17, வியாழக்கிழமை

111 ஓட்டங்களால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி வெற்றி

Kogilavani   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா 


கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம், யாழ்.மாவட்ட துடுப்பாட்ட அணிகளுக்குள் அழைக்கப்பட்ட 4 அணிகளுக்கிடையில் விக்ரம் - இராஜன் - கங்கு ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்காக நடத்திய 30 பந்துபரிமாற்ற துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி 111 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

கடந்த திங்கட்கிழமை (10) கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மேற்படி சுற்றுப்போட்டியின், ஆட்டமொன்றில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியினை எதிர்த்து ஸ்ரீ காமாட்சியம்பாள் விளையாட்டுக்கழகம் மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, 30 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 239 ஓட்;டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில்  தேவ விதுரன் 78, என்.தசீந்தன் 36, எஸ்.விதுஸ் 34 தனஞ் ஜெயகுமரா 32, அச்சுதன் 30  ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் காமாட்சியம்பாள் அணி சார்பாக எஸ்.தீபன் 2 (36) இலக்குகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்ரீ காமாட்சியம்பாள் விளையாட்டுக் கழகம் 25.1 பந்துபரிமாற்றங்களில் அனைத்து  இலக்குகளையும் இழந்து 128 ஓட்டங்;களை மாத்திரம் பெற்றது. சுஜன் 36 சுதர்சன் 27 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி சார்பாக எஸ்.றொமேஸ் 3.1 பந்துப்பரிமாற்றங்கள் பந்துவீசி 06 ஓட்டங்களை விட்டுக்கொடுத்த 05 இலக்குகளையும் கைப்பற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X