2025 ஜூலை 17, வியாழக்கிழமை

12 விளையாட்டு கழகங்களுக்கு சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

Super User   / 2014 ஜனவரி 27 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீhப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் நான்கு இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் பொத்துவில் பிரதேசத்திலுள்ள 12 விளையாட்டு கழகங்களுக்கான சீருடைகள், விளையாட்டு உபகரணங்கள் நேற்று பொத்துவில் பசுபிக் ஹோட்டலில் வைத்து வழங்கப்பட்டது.

பொத்துவில் விளையாட்டுக் கழகங்களின் சம்மேளன தவைர் எஸ்.ரி.முஸ்தபா ஆசரியர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் தேசிய காங்கிரஸின் பொத்துவில் பிரதேச அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்காண், முன்னாள் கோட்டக்கல்வலிப் பணிப்பணிப்பாளர் எம்.காதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்திய, கோவாவில் நடைபெற்ற 12 நாடுகள் பங்குபெறும் விளையாட்டு போட்டியில் 4×100 அஞ்சல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று நாட்டுக்கும், பிரதேசத்திற்கும் பெருமை தேடித்தந்த பொத்துவில் எம்.அஸ்ரபிற்கான பாராட்டு நிகழ்வினை பாரியளவில் செய்வது தொடர்பாகவும் இந்த நிகழ்வில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X